இடுகைகள்

குஜராத் திரைக்குப் பின்னால்

 ’ குஜராத் திரைக்குப் பின்னால் ’  நூல் மதிப்புரை எழுதியது : ராஜா ராஜேந்திரன் அறமெனும் ஆயுதம் ' குஜராத் திரைக்குப் பின்னால் '  ஆசிரியர் -ஆர். பி. ஸ்ரீகுமார்,  I. P. S. Retd.  கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீகுமார், இந்தக் கட்டுரைத் தொகுப்பை ஆங்கிலத்தில் எழுதி, அதை 2015- டிசம்பரில் வெளியிட்டிருக்கிறார்.   2017 -நவம்பரில் இதை அழகுத் தமிழில் மிக நேர்த்தியாக மொழி பெயர்த்திருப்பவர்கள் தஞ்சை திரு. ரமேஷ் மற்றும் திரு. ச.வீரமணி அவர்கள். ஸ்ரீகுமார், இந்தியக் காவல் துறைப் பணிக்குத் தேர்வாகி குஜராத்திற்குப் பணிபுரியப் போனவர் (டெல்லியில் பணிபுரிந்த சில மாதங்களைத் தவிர்த்துப் பார்த்தால்) இறுதிவரை குஜராத்திலேயே பல உயர் பதவிகளை வகித்து ஓய்வும் பெற்றிருக்கிறார் ! அனைத்துப் பதவிகளிலும் தன் நேர்மைக்காக  நற்பெயரெடுத்தவர் ஆர்.பி.ஸ்ரீகுமார்.  ஆனால் காவல்துறையில் தலைமைப் பதவி நோக்கி, சிகரம் நெருங்கிக்கொண்டிருந்த வேளையில், கண்ணெதிரே ஒரு பேரவலத்தை கைக்கட்டி நின்று பார்க்க நேரிடுகிறது.  இயன்றவரை அதைத் தடுக்கப் போராடியும், சக அதிகாரிகளின் ஒத்துழைப்பில்லாது, எது நடக்கக்கூடும் என அஞ்சினாரோ, அதுவே நடந்து, அது அவருடைய

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் & முடிவுகள் 2021

படம்
  தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021 ================================ எழுதியது : ராஜா ராஜேந்திரன் எழுத ஆரம்பித்த தேதி - 13/05/2021 எழுதி முடித்த தேதி - 18/09/2021 என்னுரை : 2016 தேர்தல் முடிவுக்குப் பின் இப்படி ஒவ்வொரு தேர்தலையும் பதிவது என்று முடிவெடுத்தேன். ஆனால் தோல்வி தரும் உத்வேகத்தை வெற்றி தருவதில்லை என உணர்ந்தேன் ! ஆமாம். எனக்குப் பிடித்த கட்சி தோற்கும் போது அது ஏன் தோற்றது என்பதை ஆராய்ந்து எழுத அது மிகவும் அவசியப்பட்டது. அதே வெல்லும்போது அதற்கான அவசியங்கள் ஏதுமில்லாது போகின்றது. அதனால்தான் 2019 நாடாளுமன்ற தேர்தல் & முடிவுகளைப் பதியவில்லை ! அதுசரி, அது முழுவெற்றியா என்ன ? பாதி வெற்றி. ஆனால் முரட்டுத்தனமான வெற்றி. 97/100 மதிப்பெண் வாங்கிப் பெற்ற அசுர வெற்றி. புதுவையோடு சேர்த்து மொத்தம் 40 இடங்களில் 39 தொகுதிகளை வென்ற மகா வெற்றி. ஒவ்வொரு தொகுதியின் வெற்றியும் பிரம்மாண்ட அளவில் இருந்தது. நான் சார்ந்த வடசென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, தன்னுடன் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெப்பாசிட் இழக்கச் செய்தார். ஆனால், தேசிய அளவில், 2014 ஐக் காட்